பனாமா கால்வாயை உச்சக்கட்ட வறட்சி – சீர் செய்யும் கோப்பி
உலகின் முக்கியமான கப்பல் போக்குவரத்துத் தடங்களில் ஒன்றான பனாமா கால்வாயில் கடுமையான வறட்சி நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பல்லாண்டுகளாய் காடுகள் அழிக்கப்படுவதால் நிலத்தின் நீர் உறிஞ்சும் தன்மை சிதைந்து விட்டதெனவும் கோப்பி விவசாயிகள் களமிறங்கி நிலைமையைச் சீர் செய்கின்றனர். பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து அதிகமாகும்.
உலக வர்த்தகத்தில் சுமார் 5 விழுக்காட்டுக்கு அது பங்களிக்கிறது. தொடரும் வறட்சியால் அதில் பாதிப்பாகும். பனாமா கால்வாய் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உதவுகிறது காப்பி. கால்வாயின் கரையெங்கும் கோப்பி விளைந்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க அந்த 15 ஆண்டுத் திட்டம் கைகொடுக்கிறது. மண் அரிப்பு, ஆறுகள் மாசுபடுவது முதலியவற்றைத் தடுத்துக் கால்வாயின் நீர் வரத்துக்கும் கோப்பிப் பயிர் துணை செய்கிறது.
பனாமா கால்வாய் நிர்வாகம் காப்பித் திட்டத்துக்கு இதுவரை 32 மில்லியன் டொலர் செலவிட்டுள்ளது. கோப்பி விவசாயிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறைகளைப் பின்பற்றப் பயிற்சியளிக்கப்படுகிறது.
கால்வாயின் நீர்ப்பரப்பு வேகமாகக் குறைவதைத் தடுக்கக் காப்பி பயிர் உதவுகிறது. பனாமா கால்வாயின் மேற்கு முகத்துவாரத்தில் சென்றமுறை நல்ல அறுவடையாகும்.
132 பவுண்ட் எடையுள்ள 10,000க்கும் மேற்பட்ட மூட்டை ரோபஸ்டா கோப்பிக் கொட்டைகள் அப்போது கிடைத்தன.