காலாவதியான அணுவாயுத ஒப்பந்தம் : புட்டின் விருப்பம், ட்ரம்ப் நிராகரிப்பு!
ரஷ்யா – அமெரிக்காவிற்கு இடையிலான புதிய ஸ்டார்ட் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதனை மீளவும் ஏற்படுத்த ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்குப் பதிலாக, ஒரு புதிய, மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஒப்பந்தம் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே மேற்படி ஒப்பந்தம் காலாவதியானமையானது அதீத பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அரசியல் நிபுணர்கள் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அணுவாயுத பயன்பாடு குறித்த அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




