ஈரானில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஈரானில் மாஷா அமீனியின் மரணத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடைய மூவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானிய இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட ஆண்கள் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய நீதித்துறையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஜீத் காஸிமிஇ சலேஹ் மிர்ஹாஷேமிஇ சயீட் யகோபி ஆகியோருக்கே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நடவடிக்கை பாதுகாப்புப் படையினர் மூவரின் மரணத்துக்கு வழிவகுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
(Visited 12 times, 1 visits today)