பொழுதுபோக்கு

கைதி – 2… சூர்யாவும் இல்ல, கமலும் இல்ல! வேற யாரு நம்ம தளபதியா?

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என நடிகர் கார்த்தி சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து பேசியபோது, உறுதி செய்த நிலையில், இந்த படத்தில் நடிக்க உள்ள மாஸ் நடிகர் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து, 2019-ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் ‘கைதி’.

ஹீரோயின் இல்லாமல், ரொமான்டிக் சீன் என எந்த ஒரு கமர்ஷியல் விஷயங்களும் இல்லாமல் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது இந்த திரைப்படம்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து, மாஸ்டர் படத்தை இயக்கிய லோக்கி, பின்னர் கமல்ஹாசனை வைத்து இயக்கிய ‘விக்ரம்’. வேற லெவல் வெற்றி பெற்றது. விக்ரம் வெற்றிக்கு பின்னர் இரண்டாவது முறையாக தளபதியை வைத்து லியோ படத்தை இயக்கினார். இந்த படம் கைதி, விக்ரம், பட வரிசையில் LCU படமாக வெளியானது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நிலையில், இதுவும் LCU படமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவது ஒருபுறம் இருக்க… அடுத்த ஆண்டு லோகேஷ் கனகராஜுடன் சேர்ந்து பிரியாணி பாக்கெட்டை தூக்குவது உறுதி என நடிகர் கார்த்தி, சமீபத்தில் நடந்த ரசிகர்களின் சந்திப்பின் போது தெரிவித்தார்.

லோகேஷின் LCU களத்தில், விக்ரம் பட மூலம்… சூர்யாவும் இணைந்த நிலையில், ‘கைதி 2’ படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையே மிஞ்சிய மாஸ் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி LCU படமாக உருவாக உள்ள ‘கைதி 2’ படத்தில், தளபதி விஜய்யை களமிறக்க முடிவு செய்துள்ளாராம். இந்த தகவல் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் அரசியல் கட்சியை துவங்கிய விஜய், தற்போது நடித்து வரும் கோட் படத்திற்கு பின்னர், அடுத்ததாக நடிக்க உள்ள 69-ஆவது படம் தான்… தன்னுடைய கடைசி படம் என அறிவித்தார். ஆனால் அதை தாண்டி லோக்கி படத்தில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content