ஹாங்காங்கிற்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இங்கிலாந்து முன்னாள் கடற்படை வீரர் மரணம்
சீனாவுடன் தொடர்புடைய உளவு வழக்கில் ஹாங்காங்கின் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட இங்கிலாந்தின் ராயல் மரைன்ஸின்(கடற்படை) முன்னாள் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்தனர்.
37 வயதான மேத்யூ டிரிக்கெட், லண்டனின் மேற்கில் உள்ள மைடன்ஹெட்டில் உள்ள பூங்காவில் இறந்து கிடந்துள்ளார்.
டிரிக்கெட் சமீபத்தில் குடிவரவு அமலாக்க அதிகாரி மற்றும் தனியார் புலனாய்வாளராக பணிபுரிந்தார் என்று UK இன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இறப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது, இது தற்போது விவரிக்க முடியாததாக கருதப்படுகிறது,” என்று போலீஸ் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த டிரிக்கெட், ஹாங்காங் உளவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில் ஒருவர்.