“ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன்” நயன்தாரா
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா மலையாளத்தில் நடிகர் நிவின் பாலியுடன் டியர் ஸ்டூடன்ட்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது டாக்ஸிக், மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படம், வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் நயன்தாரா.

தற்போது தனது மகன்களுடன் கொஞ்சி விளையாடும் போட்டோவை வெளியிட்டு அதன் உடன், ‛‛உங்கள் இருவரையும் ஒவ்வொரு முறையும் வாழ்க்கையில் தேர்ந்தெடுப்பேன்” என்றும் ஒரு பதிவு போட்டுள்ளார்.






