மீண்டும் வளர்ச்சி ஐரோப்பாவின் பங்குச் சந்தைகள்

ஐரோப்பாவின் பங்குச் சந்தைகள் மீண்டும் வளர்ச்சியடைந்திருக்கின்றன.
உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த வரிகள் எதிர்வரும் 90 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி பதிவாகி உள்ளது.
சீனாவுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 125 சதவீத இறக்குமதி வரியை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தை நடவடிக்கைகளும் வீழ்ச்சி கண்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு தற்காலிக வரிச் சலுகையை வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். இந்தத் தீர்மானித்தின் மூலம் ஐரோப்பா, ஆசிய கண்டங்களைச் சேர்ந்த பங்குச் சந்தைகளும் வளர்ச்சி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)