தீவிரமடையும் மோதல் – ஈரானுக்கு ஆதரவாக வெனிசுலாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்
ஈரானுக்கு ஆதரவாக வெனிசுலா தலைநகர் காரகாஸில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரான் – இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஆரீன் மற்றும் வெனிசுலா கொடிகளுடன் ஊர்வலம் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், வெனிசுலா உள்துறை அமைச்சர் டியோஸ்டோடா கபெல்லோ, நாடாளுமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போர்க் குற்றவாளி என ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். வெனிசுலாவும், ஈரானும் மிக நெருங்கிய பொருளாதார மற்றும் அரசியல் நட்புறவைக் கொண்டுள்ளன.





