உலகம் செய்தி

எப்ஸ்டீன் விவகாரம்: டிரம்ப், கிளின்டன் உள்ளிட்ட பிரபலங்களின் இரகசியப் படங்கள் வெளியீடு.

எப்ஸ்டீனின் இரகசியப் புகைப்படங்கள் தொடர் வெளியீடு; டிரம்ப், கிளின்டன் உள்ளிட்ட பிரபலங்கள் தொடர்புகள் அம்பலம்

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் சொத்துக்களில் இருந்து 95,000க்கும் அதிகமான புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை அமெரிக்க நாடாளுமன்றக் குழு பெற்றது. இதில், இரண்டாவது கட்டமாக, 80க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் நேற்று ஜனநாயகக் கட்சியினரால் வெளியிடப்பட்டது.

இந்த இரகசியப் புகைப்படங்களில் எப்ஸ்டீனின் தனிப்பட்ட தீவுப் புகைப்படங்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், தொழில்நுட்பக் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் உள்ளிட்ட சக்திவாய்ந்த பிரபலங்களுடன் எப்ஸ்டீன் இருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

நீதிமன்றத்தில் ஆவணங்களை விடுவிப்பதற்கான சட்டப்பூர்வ அவசியத்தை மீறி வெளிப்படைத்தன்மையின் பொருட்டு புகைப்படங்கள் வெளியிடப்படுவதாகக் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், “வெள்ளை மாளிகையின் மூடி மறைப்பை முடிவுக்குக் கொண்டு வந்து நீதி வழங்க வேண்டிய நேரம் இது” என்று நாடாளுமன்றக் குழுவின் மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ரொபர்ட் கார்சியா வலியுறுத்தினார்.

இதேவேளை
எப்ஸ்டீன் தொடர்பான அனைத்துக் கோப்புகளையும் வெளியிடுவதற்கு அமெரிக்க நீதித் துறைக்கு அடுத்த வாரம் டிசம்பர் 19ஆம் திகதி வரை காலக்கெடு உள்ளது

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!