துல்கர் சல்மானின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

நடிகர் துல்கர் சல்மானின் சென்னையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் கிரீன்வேஸ் சாலை – அபிராமிபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டிற்கு 2 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துணை இராணுவப் பாதுகாப்புடன் பலத்த சோதனை நடைபெற்று வருகிறது.
அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் உயர் ரக கார்களை இறக்குமதி செய்யும் முறைகேடுகளைக் கண்டறிய நாடு முழுவதும் ‘ஆபரேஷன் நும்கூர்’ என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக கொச்சியின் பணம்பிள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மான், பிருத்விராஜ் மற்றும் எலம்குளத்தில் உள்ள மம்மூட்டி ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், துல்கர் சல்மானின் 2 கார்களை பறிமுதல் செய்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.