நினைவுகளைப் போர்த்திக் கொள்ள ஆசையா? – 2026-ன் மனதைத் தொடும் புதிய வாழ்வியல் மாற்றம்.
பொதுவாகப் பழைய துணிகள் என்றாலே நாம் அவற்றை யாருக்காவது தானமாகக் கொடுப்போம் அல்லது வீட்டின் ஒரு மூலையில் போட்டு வைப்போம். ஆனால், 2026-ஆம் ஆண்டில் பழைய துணிகளை வெறும் குப்பையாகப் பார்க்காமல், அவற்றை வாழ்நாள் நினைவுகளாக மாற்றும் ‘மெமோரி குயில்ட்’ (Memory Quilts) கலாச்சாரம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது வெறும் துணிகளைத் தைப்பது மட்டுமல்ல; உணர்வுகளை இணைப்பது. நமது சிறுவயது உடைகள், காலமான முன்னோர்களின் வேட்டி-சேலைகள், அல்லது நமது வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் (திருமணம், பட்டமளிப்பு விழா) அணிந்த ஆடைகளைச் சதுர வடிவத் துண்டுகளாக வெட்டி, அவற்றை ஒரு போர்வையாகவோ அல்லது தலையணை உறையாகவோ தைப்பதுதான் இந்த ‘மெமோரி குயில்ட்’.
இது ஒரு உணர்ச்சிகரமான இணைப்பு (Emotional Bonding) நாம் நேசிக்கும் ஒருவரின் துணியால் செய்யப்பட்ட போர்வையைப் போர்த்திக் கொள்ளும்போது, அவர்கள் நம்முடனேயே இருப்பது போன்ற ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைப்பதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
இது மட்டுமல்லாது சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Sustainability) அதாவது துணி ஆலைகளால் ஏற்படும் கழிவுகளைக் குறைக்க ‘மறுசுழற்சி’ (Recycle) செய்வது மிக அவசியம். மெமோரி குயில்ட் முறை துணிக் கழிவுகள் பயனுள்ள பொருளாக மாறுகிறது.
மேலும் ஆர்ட் தெரபி (Art Therapy) இதன் உட்பொருள்ளானது, பழைய நினைவுகளை அசைபோட்டபடி தைப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு சிறந்த பயிற்சியாக (Mindfulness Activity) பார்க்கப்படுகிறது.
நீங்களே ஒரு ‘மெமோரி குயில்ட்’ தயாரிப்பது எப்படி?

முதலில் உங்கள் பீரோவில் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் இருக்கும், ஆனால் உங்களுக்குப் பிடித்தமான 10 முதல் 15 ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள். அந்த ஆடைகளை ஒரே அளவிலான (உதாரணமாக 10×10 இன்ச்) சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
தரையில் அந்தத் துண்டுகளை உங்களுக்குப் பிடித்த வரிசையில் அடுக்கி வைத்து ஒரு டிசைனை உருவாக்குங்கள். அதை தையல் இயந்திரம் மூலமாகவோ அல்லது கைகளாலோ அந்தத் துண்டுகளை ஒவ்வொன்றாக இணைத்துத் தையுங்கள். பின்பு பின்புறம் ஒரு மென்மையான பருத்தித் துணியை வைத்துத் தைத்தால் உங்கள் நினைவுகளின் போர்வை தயார்!
பொருட்கள் அழிந்து போகலாம், ஆனால் அந்தப் பொருட்களோடு கலந்திருக்கும் நினைவுகள் அழியாதவை. இந்த 2026-ல், பழைய நினைவுகளைப் போர்த்திக் கொண்டு புதிய நாளைத் தொடங்குவோம்!






