ஸ்பெயினில் பெண் ஊடகவியலாளருக்கு நேரலையில் நடந்த சங்கடம் (வீடியோ)
ஸ்பெயின் நாட்டில் நேரலையில் இருந்த பெண் ஊடகவியலாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செவ்வாயன்று மாட்ரிட் கொள்ளை சம்பவம் குறித்து இசா பலாடோ என்ற ஊடகவியலாளர் நேரலையில் தகவல் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கிய நபர் சட்டென்று இசா பலாடோவின் பின் பக்கத்தில் கை வைத்துள்ளார்.ஆனால், அந்த நபரை சமாளித்துவிட்டு, இசா பலாடோ செய்தியை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் செய்தி அரங்கத்தில் இருந்து இடைமறித்த இன்னொரு ஊடகவியலாளர் நடந்த சம்பவத்தை உறுதி செய்ய முயன்றுள்ளார்.
இசா தமக்கு நேர்ந்ததை உறுதி செய்ய, சட்டென்று அந்த நபரின் முகத்தை நேரலையில் காட்ட வேண்டும் என செய்தி அரங்கத்தில் இருந்து கோரிக்கை வைக்க, தொடர்புடைய நபர் அப்போதும் இசாவுக்கு அருகாமையில் சிரித்தபடி காணப்பட்டார்.அந்த நபரிடம் இப்போது தொட வேண்டுமா என இசா வினவ, அந்த நபர் சிரித்தபடி அங்கிருந்து வெளியேறியுள்ளார். இந்த சம்பவம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அந்த நபர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://twitter.com/i/status/1701592320645210180
இந்த நிலையில் ஸ்பெயினின் தொழிலாளர் துறை அமைச்சர் யோலண்டா டியாஸும் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், இந்த விவகாரம் தண்டிக்கப்படாமல் இருக்கக்கூடாது என்று கூறினார்.ஏற்கனவே மகளிர் கால்பந்து வீராங்கனை ஒருவரை உதட்டில் முத்தமிட்ட விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, இன்னும் ஓயாமல் இருக்கும் நிலையில் தற்போது நேரலையில் ஒருவர் அருவருப்பாக நடந்து கொண்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.