Tamil News

பணியாளர்களுக்கு எலான் மஸ்க் விடுத்துள்ள வித்தியாசமான உத்தரவு…

இனி வரும் சந்திப்புகளில் நிறுவனம் சம்பந்தபட்ட ஒரு கெட்ட செய்தியையாவது பணியாளர்கள் தெரிவிக்க வேண்டும். நல்ல செய்தியை மெதுவாகவும் தாமதமாகவும் கூறுங்கள் என எலான் மஸ்க் கூறியுள்ளார்

பன்னாட்டு நிறுவனங்களில், தலைமை பொறுப்பில் உள்ளவர்களில் தொடங்கி சாதாரண பொறுப்பில் உள்ளவர்கள் வரை அனைத்து ஊழியர்களும் பங்கு பெறும் “ஆல் ஹேண்ட்ஸ் மீட்” எனப்படும் அனைத்து தரப்பு சந்திப்பு கூட்டங்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.இச்சந்திப்புகளில் நிறுவனங்களின் செயல் திட்டங்கள், வழிமுறைகள், எதிர்கால லட்சியங்கள் மற்றும் அவ்வப்போது திடீரென எழும் சிக்கல்கள் ஆகியவை குறித்து தீவிரமாக அலசப்படும். அவ்வாறு எக்ஸ் தள பணியாளர்கள் சந்திப்பில் நடந்த சம்பவம் இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கினார். அதன்பின்னர் தலைமை பொறுப்பிலிருந்த பலரை தடாலடியாக நீக்கிய அவர், சமீபத்தில் அந்நிறுவனத்தின் பெயரை ‘எக்ஸ்’ (X) என மாற்றினார். பரபரப்புகளுக்கு சொந்தக்காரரான எலான் மஸ்க் தனது ஊழியர்களுடன் “ஆல் ஹேண்ட்ஸ் மீட்” ஒன்றை சமீபத்தில் நடத்தினார். அந்த சந்திப்பில் மஸ்க் பல ஆச்சரியமான வழிமுறைகளை வலியுறுத்தியுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Ex-Tesla employee reveals shocking details on worker conditions: 'You get  fired on the spot. Because Elon was...' | Mint

அந்த சந்திப்பில் எலான் மஸ்க் பேசியது இதுதான், “நான் ஒரு விஷயத்தை வெளிப்படையாக கூற விரும்புகிறேன். இனி வரும் காலங்களில் எந்த சந்திப்புகளிலும், நிறுவனம் சம்பந்தபட்ட ஒரு கெட்ட செய்தியையாவது பணியாளர்கள் தெரிவிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கெட்ட செய்தியை கூட கூறலாம். நல்ல செய்தியை மெதுவாகவும் தாமதமாகவும் கூறுங்கள்; ஆனால், கெட்ட செய்தியை உரக்க, உடனடியாக, பல முறை கூறுங்கள்.

எனது ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் போது அவை பல முறை தோல்வியுற்ற செய்தியையே நான் கேட்டு கொண்டவன். ஒரு ராக்கெட் வெடித்து சிதறுவதை விட கெட்ட செய்தியை இது போன்ற நிறுவனங்கள் தந்து விட முடியாது. உங்களுக்குள்ளேயே நடைபெறும் சந்திப்புகளிலும் கூட இதை ஒரு வழிமுறையாக பின்பற்றுங்கள்.

எனது ‘டெஸ்லா’ மற்றும் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களும் சந்திப்புகளில் முதலில் கெட்ட செய்தியைத்தான் பகிர்ந்து கொள்வார்கள். அங்கெல்லாம் இந்த வழிமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதே போல் இங்கும் அதையே நடைமுறைப்படுத்துங்கள்” என்று அவர் தெரிவித்தார். அதிரடி முடிவுகளுக்கு பெயர் பெற்ற எலான் மஸ்கின் இந்த வியப்பூட்டும் உத்தரவு குறித்துதான் தற்போது சமூக வலைதளங்கள் பெரிய அளவில் விவாதித்து வருகிறது.

Exit mobile version