டெஸ்லாவுடன் இந்தியா வர தயாரும் எலான் மஸ்க்
உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க், அடுத்த ஆண்டு இந்தியா வரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார்.
உலகின் புகழ்பெற்ற மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லாவின் கிளையை அடுத்த ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் எலோன் மஸ்க் கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் எலோன் மஸ்க் இதனைத் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் இந்திய பிரதமரை சந்தித்த போது, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்ததாக எலோன் மஸ்க் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா வந்துள்ள நிலையில், இந்த சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ னை சந்தித்து அமெரிக்க காங்கிரஸில் உரையாற்ற உள்ளார்.