குறைவான தீமைகளை கொண்ட கொள்கைகளை உடைய ஆட்சியாளரை தெரிவு செய்யுங்கள் – போப்!
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவரையும் விமர்சித்த போப், அமெரிக்க கத்தோலிக்கர்களிடம் “குறைவான தீமைகளை தனது கொள்கைளில் கொண்டிருக்கும் ஆட்சியாளரை (choose the lesser evil) தெரிவு செய்யுமாறு கூறியுள்ளார்.
ஆசிய நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்த அவர், சிங்கப்பூரில் இருந்து ரோம் நகருக்கு புறப்படுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது கருக்கலைப்பு உரிமைகளை ஆதரிக்கும் துணை ஜனாதிபதி ஹாரிஸின் நிலைப்பாட்டை அவர் விமர்சித்தார். இந்த செயல்முறை ஒரு “கொலைக்கு சமம் என அவர் விமர்சித்துள்ளார்.
இதேவேளை மேலும் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் டிரம்பின் திட்டம் ஒரு “கடுமையான” பாவம் என்று கூறினார்.
பின்னர், அமெரிக்க கத்தோலிக்கர்கள் நவம்பர் மாதம் வாக்கெடுப்புக்குச் செல்லும்போது “குறைவான தீமையைத் தேர்ந்தெடுக்க அழைப்பு விடுத்தார்.