EG.5, “எரிஸ் கொரோனா தொற்றுக்கு எதிராக Pfizer தடுப்பூசி செயற்படுகிறது!
பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், ஃபைஸர் தடுப்பூசி EG.5, “எரிஸ்” என்று சொல்லப்படுகிற புதிய வகைக்கு கொரோனாவிற்கு எதிராக செயற்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மாறுபாடடைந்த புதிய கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அமெரிக்காவில் 17 வீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
அதேபோல் உலகின் பிற நாடுகளான சீனா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் கனடா போன்ற பிற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தும் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என அண்மையில் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது.
அதற்கமைய தற்போது ஃபைஸர் தடுப்பூசி புதியவகை கொரோனா தொற்றுக்கு எதிராக செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)