தமிழ்நாடு

BJP-யுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி உறுதிபடுத்தாமல் இருக்கிறார்- புகழேந்தி கேள்வி

கோவை சௌரிபாளையம் பகுதியில் அதிமுக – ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,இரண்டு மூன்று தினங்களாக காமெடியாக ,கைதட்டல், விசில் என போகின்றது எனவும், சிங்க கூட்டம், சிறு நரி கூட்டம் என பல டயலாக் பேசினார்கள் என கூறினார். கூட்டணி முடிந்துவிட்டது என்று கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜெயக்குமாரும் கூறி விட்டார் என தெரிவித்தார்.

ஜெயக்குமார் கொடுத்த ஸ்டேட்மென்டிற்கு எதிராக, கட்சிகாரர்களை அமைதியாக இருக்கும்படி எடப்பாடி பழனிச்சாமியும் கூறிவிட்டார் என தெரிவித்தார்.

ஜெயலலிதா என்ற ஆளுமையை விட எனது தாய், மனைவி உயர்த்தவர்கள், அண்ணா ஓடி ஓளிந்தார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகிறார் என கூறிய அவர், இரு சாதிகளை தூண்டிவிடும் வேலையை அவர் செய்கின்றார் என கூறினார்.

ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் தங்களது நிலைப்பாடுகளை மாற்றக்கொள்ள கூடாது எனவும் எடப்பாடி பழனிச்சாமி எல்லாரையும் வாயை மூட சொல்லி விட்டார் எனவும் தெரிவித்தார்.

(Visited 21 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்