சருமத்தின் எதிரியான மன அழுத்தத்தை போக்க இலகுவான வழிமுறைகள்!
சருமத்தை கெடுக்கும் மன அழுத்ததை எப்படி சமாளிப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்
நகரத்தில் வாழ்க்கை எவ்வளவு எக்ஸைட்டிங்காக இருக்கிறதோ அவ்வளவு மனஅழுத்தத்தையும் கொண்டிருக்கிறது. வேலையில் இருக்கும் ஸ்ட்ரெஸ், டெட்லைன், வீட்டை கவனிப்பது, தினமும் செய்யவேண்டிய விஷயங்களின் பட்டியல் என்று பலவற்றை நம் மனதில் வைத்துக் கொண்டு வாழ்க்கை நகர்கிறது. மன அழுத்தம் என்பது ஒருவரது உடலில் பல பிரச்சனைகள் எளிதில் வர காரணமாக இருக்கும்.
தற்போது நிறைய மக்கள் பல்வேறு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படுவதற்கு இந்த மன அழுத்தம் தான் காரணம். மன அழுத்தம் உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகளை உண்டாக்கும். மன அழுத்தம் மற்றும் நரம்பு பதற்றம் அதிகரிக்கும் போது, சரும அரிப்பு பிரச்சனையைத் தூண்டும்.
மன அழுத்தத்தின் போது வெளியிடப்படும் அதிக அளவு கார்ட்டிசோல் ஹார்மோன் இரத்த நாளங்களை சுருக்கி, உடலில் இரத்த ஓட்டத்தை மோசமாக்கும். உடலில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் போது, சருமம் வறட்சியடையும். நீங்கள் அதிகமான அளவில் அழுத்ததில் இருக்கும்போது, முகத்தில் பருக்களும் ஏற்படும்.
இதற்கு ஹார்மோன் கார்டிசோல் காரணம். மன அழுத்தம் அதிகரிக்கும் போது, தூக்கமின்மை ஏற்பட்டு, அதன் காரணமாக கருவளையங்கள் ஏற்படும். மன அழுத்தம் அதிகரிக்கும் போது, முகத்தில் இரத்த ஓட்டம் குறைந்து, அதனால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படும். “உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் தோல் பிரச்சினை இருந்தால், அது உங்கள் மனஅழுத்தத்தால் மேலும் அதிகரிக்கக்கூடும். சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சினைகள் தீவிரமடைவதை உணரமுடியும்.
எப்படி சமாளிப்பது?
இதற்கு முழுமையான ஒரே தீர்வு என்றால் உங்களில் ஸ்ட்ரெஸை கட்டுக்குள் வையுங்கள். ஆன்ஸைட்டி, அழுத்தம் எல்லாவற்றையும் உங்களிடமிருந்து தூரத்தில் வையுங்கள். இது உங்கள் சரும பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வைத் தரும்.
அதே போல, சில மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வாருங்கள். உதாரணத்திற்கு, டல் சருமத்தை போக்க, நல்ல ஸ்கிரப்பை முகத்தில் பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை நன்றாக எக்ஸ்ஃபோலியேட் செய்து, இறந்த செல்களை நீக்கி பொலிவைத் தரும்.