துருக்கியில் இரண்டு முறை பதிவான நிலநடுக்கங்கள் – வீதியில் திரண்ட மக்கள்!
துருக்கியின் வடமேற்கு பகுதியில் இன்று (28.09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குடாஹ்யா மாகாணத்தில் உள்ள சிமாவ் நகரில் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 8 கிலோமீட்டர் (5 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அவசரகால நிறுவனம் AFAD தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்றும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பூங்காக்களில் ஒன்றுக்கூடியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
(Visited 2 times, 1 visits today)





