அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்!
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்க மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள டிக்லிபூருக்கு வடக்கே 150 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக என்சிஎஸ் தெரிவித்துள்ளது.

இதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





