சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு வரி குறைப்பு
சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், பல பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்க அரசாங்க நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜூன் 30, 2023 அன்று, சிறப்பு வர்த்தமானி எண். 2338/54 விவாதிக்கப்பட்டது.
அதன் கீழ், 15% ஆக இருந்த வரி விகிதத்தை 5% ஆக குறைக்க முன்மொழியப்பட்டது.
அதற்கு ஒப்புதல் வழங்கிய குழு, இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் நாட்டுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அதிகாரி, அதுகுறித்து சாத்தியக்கூறு ஆய்வு நடத்த இயலாது என்றார்.
எவ்வாறாயினும், குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான தர்க்கரீதியான உண்மைகளை முன்வைத்து, 6 வாரங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தை கையாள்வதற்குப் பொறுப்பான தலைமை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.