தரமான நடிப்பால் ஸ்கோர் செய்யும் பிரதீப்… ‘டியூட்’ வசூல் எவ்வளவு?

கோமாளி படம் மூலம் இயக்குனராக வந்து, பின் லவ் டுடே படத்தின் மூலம் நடிகராக மக்கள் மனதில் நின்றவர்தான் பிரதீப் ரங்கநாதன்.
இயக்குனராக பெற்ற வெற்றியை விட நடிகராக அதிக ஸ்கோர் செய்திருந்தார் பரிதீப். வித்தியாசமான கதையை மிகவும் விறுவிறுப்பாக திரையில் காட்டியிருந்தார்.
5 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இந்தப் படத்திற்கு பிறகு பிரதீப் நடித்த படம் தான் டிராகன். இந்தப் படமும் வசூலில் 150 கோடி வரையில் வசூலை குவித்தது.
இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் டியூட்.
முழுக்க காதல், செண்டிமெண்ட் காட்சிகளை மையப்படுத்தி 17ஆம் திகதி இந்தப் படத்தை இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார்.
இந்தப் படமும் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதையை மக்கள் வெறுத்தாலும், ரசித்து வருகின்றனர்.
படம் வெளியான முதல் நாளில் சாக்னிக் அறிக்கையின்படி ரூ.9.75 கோடி வசூல் குவித்தது. 2ஆவது நாளில் தமிழ் மற்றும் தெலுங்கில் முறையே ரூ.7.4 கோடி மற்றும் தெலுங்கில் ரூ.2.9 கோடி உள்பட மொத்தமாக ரூ.10.3 கோடி வசூல் குவித்தது.
3ஆவது நாளில் மட்டும் ரூ.10.50 கோடி வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக இந்திய அளவில் ரூ.30.35 கோடி வசூல் எடுத்துள்ளது என்று சாக்னிக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், விக்கிப்பீடியா பக்கத்தில் ரூ.45 கோடி வசூல் எடுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.