பலாத்காரத்தின் போது, பற்கள் தொண்டையில் சிக்கி மூதாட்டி பலி
78 வயதான மூதாட்டி ஒருவர் வாயை இறுகப் பிடிக்கும் போது பற்கள் விழுந்து தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பலாங்கொடை பொலிஸில் பதிவாகியுள்ளது.
நேற்று (29) பெண்ணின் சடலத்தின் பிரேத பரிசோதனையின் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி பலாங்கொடை, முகுனமலை, தூரவெல ஆற்றங்கரையில் இந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், நேற்று (29) இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
கொலையாளியைக் கண்டுபிடிக்க மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
(Visited 13 times, 1 visits today)





