பாக்ஸ் ஆபிஸில் அதிரடி காட்டும் ‘டியூட்’ – அதிகாரப்பூர்வ வசூல் விபரம்

‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் ‘லவ் டுடே’ மூலம் நடிகராக மாறி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.
அதன் பின், ‘டிராகன்’ திரைப்படத்தில் நடித்திருந்த அவர், தற்போது பல படங்களை வரிசையில் வைத்திருக்கின்றார்.
இந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவருடைய புதிய படமான டியூட் படம் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் மமிதா பைஜு நாயகியாகவும், சரத் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், இளம் ரசிகர்களிடையே படம் வேகமாக வைரலாகி வருகின்றது.
படம் வெளிவந்த நான்கு நாட்களிலேயே, உலகளாவிய அளவில் ரூ. 83 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது பிரதீப் ரங்கநாதனின் படங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆரம்ப வசூல்களில் ஒன்றாகும்.
பிரதீப் ரங்கநாதன் தனது மூன்றாவது படமான டியூட் மூலமாக மீண்டும் ஒரு ஹிட் படத்தைத் தந்துள்ளார். இளம் ரசிகர்களிடையே அவரின் ஸ்டைல், காமெடி மற்றும் ரொமான்ஸ் கலந்த நடிப்பு சிறப்பாகப் பாராட்டப்படுகிறது. படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து நல்ல வளர்ச்சியைக் காணும் நிலையில் உள்ளது.