டுபாய் சொக்லேட் மோகம் – உலகளவில் பிஸ்தாவுக்கு கடும் பற்றாக்குறை

TikTok மூலம் பிரபலமான டுபாய் சொக்லேட் மோகத்தால் உலகளவில் பிஸ்தா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வெளியே சுவையான சொக்லேட், உள்ளே மொறுமொறு குனாபே, பிஸ்தா கலந்த கலவை கலந்த இந்த வித்தியாசமான சொக்லேட்டை Fix Dessert Chocolatier நிறுவனம் 2021ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.
TikTok-இல் மரியா வெஹரா என்பவர் அந்த சொக்லேட்டைச் சாப்பிடும் காணொளி பிரபலமான பின்பு டுபாய் சொக்லேட் மோகம் தொடங்கியது.
அந்தக் காணொளி சுமார் 120 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. Lindt, Nestle ஆகிய நிறுவனங்களும் அதே போன்று சொக்லேட் வெளியிட்டன.
அதனால் பிஸ்தா பருப்புகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. உலகிலேயே அமெரிக்காவிற்கு அடுத்து ஆக அதிகமாக பிஸ்தா தயாரிக்கும் நாடு ஈரானாகும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த மாதம் வரை ஈரான் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு ஏற்றுமதி செய்த பிஸ்தாவின் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்ற ஆண்டு அமெரிக்காவின் பிஸ்தா விளைச்சல் சரிந்தது. எப்படியிருப்பினும் டுபாய் சொக்லேட் மோகம் குறைவதுபோல் தெரியவில்லை.
அதுபோன்று சொக்லேட் செய்து விற்கும் நிறுவனங்களை Fix Dessert Chocolatier நிறுவனத்தின் முதலாளிகள் குறைகூறியுள்ளனர்.
தங்களின் நற்பெயரை அது பாதிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.