இலங்கையின் 12 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை!
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரை 48,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 156,000 பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விலங்குகளுக்கான குடிநீர் பிரச்சினையும் உள்ளது. மேலும், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகளின் பொறுப்பான முகமைகள் பவுசர்கள் மூலம் தண்ணீர் வழங்குவதற்கு உழைத்து வருகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் குடிநீரை வழங்க அரசாங்கம் 2 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. எனினும், அந்த மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.