திரௌபதி 2: வரலாற்று பின்னணியில் ஒரு அதிரடிப் பயணம்!
2020-ல் வெளியாகி பெரும் விவாதங்களை ஏற்படுத்திய ‘திரௌபதி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது. ஆனால், இது சமகாலக் கதை அல்லாமல், 14-ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது.

முதலில் ஜனவரி 23 அன்று வெளியாகவிருந்த இப்படம், தற்போது பொங்கல் வெளியீடாக தை 15, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய்யின் ‘ஜனநாயகன்’ தள்ளிப்போனதை அடுத்து இந்தத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மூன்றாம் வீர வல்லாள மகாராஜா மற்றும் செஞ்சி பகுதியை ஆண்ட வீரசிம்ம காடவராயர் ஆகியோரின் வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக்கதை14-ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் மீது நிகழ்ந்த சுல்தான்களின் படையெடுப்பு மற்றும் அதற்கு எதிரான தமிழக மன்னர்களின் வீரப் போராட்டத்தை இப்படம் விவரிக்கிறது. இதில் ரிச்சர்ட் ரிஷி ‘வீரசிம்ம காடவராயர்’ பாத்திரத்திலும், நட்டி நடராஜ் ‘மூன்றாம் வீர வல்லாள மகாராஜா’ பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

“போற்றப்பட வேண்டியது வீரம் மட்டுமல்ல… பெண்களின் தியாகமும்தான்” என்ற வசனத்துடன் வெளியான ட்ரைலர், போர்க்காலங்களில் பெண்களின் பங்களிப்பையும் தியாகத்தையும் படம் பேசப்போவதை உணர்த்துகிறது.
ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சரித்திரப் படம் என்பதால் பின்னணி இசை மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.





