ஐரோப்பா

உக்ரைனில் நீல நிறமாக மாறிய நாய்கள் ; ஆச்சரியத்தில் விலங்கு பராமரிப்பு குழு

உக்ரைனின் செர்னோபிலில்(Chernobyl) உள்ள நாய்கள் திடீரென நீலநிறமாக மாறியிருப்பது, விலங்கு பராமரிப்பு குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

டாக்ஸ் ஆஃப் செர்னோபில்(Talks of Chernobyl) என்ற தொண்டு நிறுவனம் பகிர்ந்த இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த நாய்கள் 1986 செர்னோபில் அணுசக்தி பேரழிவிற்குப் பிறகு அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களின் சந்ததியை சேர்ந்தவை.இந்த நாய்கள் மனித நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியில் வனவிலங்குகளுடன் வாழ்கின்றன.

‘டாக்ஸ் ஆஃப் செர்னோபில்’ அமைப்பு இங்கு உள்ள சுமார் 700 நாய்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் வழக்கமான கருத்தடை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்ய சென்றபோது போது மூன்று நாய்கள் விசித்திரமாக நீல நிறத்தில் இருப்பதை கண்டறிந்ததாக அவ்வமைப்பின் தெரிவித்தனர்.

Kids News: abandoned dogs near nuclear power plant turn blue | KidsNews

அவை இதன்முன் சாதாரணமாகவே இருந்தன என்றும் அப்பகுதியில் உள்ள எதோ ஒரு ரசாயனத்தால் அவற்றின் நிறம் மாறியிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.உண்மையான காரணத்தைக் கண்டறிய அவற்றின் ரோமம், தோல் மற்றும் இரத்தத்தின் மாதிரிகளை சேகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

1986 ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணுமின் நிலையத்தின் நான்காவது அணு உலை வெடித்தது. அபாயகரமான கதிரியக்கப் பொருட்கள் காற்று மண்டலத்தில் பரவி, உக்ரைன், பெலாரஸ், ரஷ்யா மட்டுமின்றி ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரவியது.இதில் பலர் உயிரிழந்தனர்.

மேலும் கதிரியக்கத்தால் மக்களுக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்பட்டன. சுமார் 30 கி.மீ அணுமின் நிலையத்தை சுற்றளவுள்ள பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

@dogsofchernobyl

Blue dogs found in Chornobyl. A very unique experience we have to discuss. We are on the ground now catching dogs for sterilization and we came across 3 dogs that were completely blue. We are not sure exactly what is going. The town people are asking us why the dogs were blue, as They were not blue last week. We do not know the reason and we are attempting to catch them so we can find out what is happening. Most likely they’re getting into some sort of chemical. They seem to be very active and healthy but at this point we have not been able to catch them. Photos taken by the team October 2025 #dogs #bluedogs #chernobyl #strang #Love

♬ Ordinary – Alex Warren

(Visited 2 times, 3 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்