பிக் பாஸ் சீசன் 9 டைட்டிலை வெல்லப்போவது யார் தெரியுமா? வெளியான தகவல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றது.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்த சீஸனின் பைனல் நடைபெறவுள்ளது.
இறுதியாக பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் சாண்ட்ரா,சபரி ,திவ்யா ,அரோரா மற்றும் விக்ரம் என ஐந்து போட்டியாளர்கள் இருந்தனர்.
இவர்களில் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று சாண்ட்ரா இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கின்றார்.
இந்த சீஸனின் டைட்டில் வின்னர் இவர்தான் என பலராலும் அடித்து சொல்லப்பட்ட கானா வினோத் 18 லட்சத்திற்கான பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியை விட்டு வெளியேறினார்.
சாண்ட்ரா வெளியேறியதை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 9 இறுதிப்போட்டியில் திவ்யா, அரோரா, விக்ரம் மற்றும் சபரி ஆகியோர் இடம்பிடித்திருக்கின்றனர்.
இந்த நான்கு போட்டியாளர்களின் திவ்யா தான் கண்டிப்பாக டைட்டிலை வெல்வார் என பெரும்பாலான இரசிகர்கள் கூறுகிறார்கள்.





