ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்.. அனிருத்தின் வருமானம் இத்தனை கோடிகளா?
அனிருத்தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாகியிருக்கிறார் அவர்.
அவரது இசையமைப்பில் அடுத்ததாக வேட்டையன், தேவரா, விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படம் என வரிசையாக ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவரது ஹோட்டல் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அனிருத்தை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே வரிசையாக படங்களுக்கு இசையமைத்துவருகிறார். அதன்படி ஜெயிலர், ஜவான், லியோ ஆகிய படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸாகின.
மேலும் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும அனிருத் தனது சம்பளத்தையும் பத்து கோடி ரூபாயாக உயர்த்திவிட்டார் என்ற தகவலும் கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு படத்துக்கு அவர் பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சூழலில் ஹோட்டல் தொழில் ஒன்றையும் அவர் நடத்திவருகிறார். அதன்படி சம்மர் ஹவுஸ் ஈட்டறி என்ற ஹோட்டலை தனது நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் அவர் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அதில் சாதாரண காஃபியின் விலையே 30 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது என்றும் சூப் வகைகளின் விலை ஆரம்பமே 200 ரூபாய் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
முழுக்க முழுக்க எலைட் மக்களுக்கான ஹோட்டலாக இதை அனிருது நடத்திவருகிறாராம். அதனால் லெமன் டீ 100 ரூபாய், பாஸ்தா, கேக் வகைகள் 300 ரூபாய் என விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மலைப்பை ஏற்படுத்துமாம். மேலும் இந்த ஹோட்டல் தொழில் மூலம் அனிருத் லட்சங்களில் லாபம் பார்த்துவருவதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.