வாழ்வியல்

தொப்பை வைத்திருப்பவர்களா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது

அதிகமானோர் வீட்டில் செய்யக்கூடிய உணவுகளை விட, தெருவோரங்களில் விற்கப்படக்கூடிய பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால், நமது உடல் ஆரோக்கியம் கெடுவதோடு, நமது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் நம்மில் பலர் தொப்பையை அக்குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதுண்டு.

தொப்பையைக் குறைப்பது மிகவும் முக்கியமானது மற்றும் கொஞ்சம் கடினமானது. இதற்கு உணவுமுறை உட்பட ஒரு ஒழுங்குமுறையான செயல்பாடுகள் இருக்க வேண்டும். தொப்பையை குறைக்க முதலில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். தற்போது இந்த பதிவில் நமது உடல் எடையை குறைக்கக்கூடிய பானங்கள் பற்றி பார்ப்போம்.

green tea belly fat before and after,Up To OFF 71%

கிரீன் டீ

க்ரீன் டீயில் பாலிஃபீனால் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சீன ஆய்வில், கிரீன் டீ உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டது. இது அதிகப்படியான பசி ஏற்படுவதை அத்தடுக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.

See also  அதிகமாக வலி மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் ஆபத்து - எச்சரிக்கும் மருத்துவர்கள்

Weight loss: 5 simple morning drinks to melt belly fat | The Times of India

இலவங்கப்பட்டை தேநீர்

இலவங்கப்பட்டை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு மசாலா. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதிலும், இன்சுலின் எதிர்ப்பை (IR) குறைப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இலவங்கப்பட்டை மன உளைச்சலை கட்டுப்படுத்துகிறது. இது மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலைக் குறைக்கிறது. இலவங்கப்பட்டை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

ஐந்து இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. பல நூற்றாண்டுகளாக அதன் ஆரோக்கிய நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கப் இலவங்கப்பட்டை டீயைக் குடிப்பது, கூடுதல் கொழுப்பைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவும்.

Weight loss tea: Best diet drink to lose belly fat | Express.co.uk

தேன்

தேன் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. அதனால் அதிகப்படியான பசியை தடுக்கிறது என்று கூறப்படுகிறது. ஒரு நல்ல ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், உள்ளுறுப்பு கொழுப்பு செல்கள் உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்க்கிறது.

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க விரும்புபவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content