தி.மு.க. தேர்தல் விஞ்ஞாபனம் மார்ச் முதல்வாரம் வெளியீடு: விஜய் அணியும் புது வியூகம்!
தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.கவின் DMK தேர்தல் விஞ்ஞாபனம் election manifesto எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது என தெரியவருகின்றது.
தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்காக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.தலைமையில் விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழு தற்போது இதற்குரிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பின் கருத்துகளை கேட்டறிந்துவருகன்றது.
‘‘மக்களின் கருத்துகளை கேட்டறிந்துதான் இந்த தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய மக்களுடன் தொடர்ந்துபயணிக்கும் சமூக அமைப்புகளின் ஆலோசனைகளையும் பெற்று வருகிறோம்.” – என்று கனிமொழி எம்.பி. குறிப்பிட்டார்.
அதேவேளை, ஏனைய பிரதான கட்சிகளும் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்காக, மக்கள் தங்களது பரிந்துரைகளை வழங்குவதற்கு வசியாக தமிழக வெற்றிக் கழகம் TVK இணையதளமொன்றை தொடங்கியுள்ளது.
இணையதளத்தில் நுழைந்ததும், “நம் காலம் வருகிறது. வளமான தமிழகம், நலமான மக்கள், பாதுகாப்பான எதிர்காலம் என்ற பயணத்தில் பங்கேற்போம்” என முழக்கம் வெளிப்பட்டுள்ளது.





