எனக்கு விவாகரத்து – புகைப்படக்காரரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டு அதிர்ச்சி கொடுத்த பெண்

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தமது திருமண தினத்தன்று படம் பிடித்தவரிடம் தான் செலுத்திய கட்டணத்தைத் திருப்பிக் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள் முடிந்துவிட்டன. விவாகரத்து செய்ததால் பஅவர்.ணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளபர். லான்ஸ் ரோமியோ (Lance Romeo) எனும் புகைப்படக்காரர் அப்பெண்ணுடன் WhatsAppஇல் நடந்த உரையாடலை Twitterஇல் பதிவுசெய்தார்.
அதை இணையத்தில் பலரும் பகிர்கின்றனர். பெண்ணின் கோரிக்கையைக் கண்டு அவர் விளையாட்டுத்தனமாகக் கேட்கிறார் என லான்ஸ் முதலில் நினைத்துள்ளார்.
பின்னர் அவர் உண்மையிலேயே பணத்தைத் திருப்பிக் கேட்பதை அறிந்ததும் அவ்வாறு செய்யமுடியாது என்று லான்ஸ் கூறிவிட்டார்.
அதை அறிந்ததும் அந்தப் பெண், தாம் வழக்கறிஞர்களின் ஆலோசனையை நாடியிருப்பதாக லான்ஸிடம் கூறினார். லான்ஸை நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார
அதை நிராகரித்த லான்ஸ் வழக்கறிஞர்களைத் தொடர்புகொள்ளும்படிக் கூறினார். லான்ஸின் பதிவைக் கண்டு அப்பெண்ணின் முன்னாள் கணவர் அவரிடம் மன்னிப்புக் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பணத்தைத் திருப்பிக் கேட்கும் பெண்ணின் துணிச்சலைக் கண்டு இணையவாசிகள் பலர் வியந்தனர். லான்ஸ் அந்தப் பெண்ணுக்குச் சிறந்த முறையில் பதிலளித்தார் என்றும் பலர் பாராட்டினர்.