பொழுதுபோக்கு

தயாரிப்பாளர்களுடன் நிலவும் பிரச்சினைகள்! தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை

தயாரிப்பாளர்களுடன் நிலவும் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் சில நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுத்ததாக வெளியான செய்தியை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சில நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொடுத்ததாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நல்ல உறவு இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இரு சங்கங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் சில செய்திகள் சமீபத்தில் வெளிவந்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக 14 நடிகர், நடிகைகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதில் உண்மை இல்லை. தயாரிப்பாளர் சங்கத்துக்கும், நடிகர் சங்கத்துக்கும் இடையிலான சுமூகமான உறவை கெடுக்கவே இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன.

தயாரிப்பாளர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்