3000 ஆண்டுகள் பழைமையான ஜெருசலேமின் நினைவு சின்ன அமைப்பு கண்டுப்பிடிப்பு!
வரலாற்றில் பழமையான நகரங்களில் ஒன்றாக கருதப்படும் டேவிட் நகரில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழங்கால அகழியின் இடிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
பைபிளின் இரண்டு புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஜெருசலேமில் ஒரு ‘நினைவுச் சின்ன’ அமைப்பை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
150 ஆண்டுகளாக, பைபிளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, நகரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதை நிரூபிக்க ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றினர், மேலும் அவர்கள் இப்போது தெற்கு குடியிருப்புப் பகுதியை வடக்கில் உள்ள மேல் நகரத்திலிருந்து பிரிக்கும் அகழியையும் கண்டுபிடித்துள்ளனர்.
அகழி சுமார் 30 அடி ஆழம் மற்றும் கிட்டத்தட்ட 100 அடி அகலம் கொண்டது என விவரிக்கப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)