‘சகுனி’ பட இயக்குனர் திடீர் மரணம்
பிரபல இயக்குனர் சங்கர் தயாள் இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
கார்த்தி நடித்த சகுனி படத்தினை இயக்கியவர் இவர், தற்போது குழந்தைகள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனது அடுத்த படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்த நிலையில், இன்று குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் பிரெஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலந்துகொள்ள வந்தபோது மாலை 5.45க்கு இயக்குனர் சங்கர் தயாளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து இருக்கிறார்.
கொளத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்ற நிலையில், வரும்போதே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.
(Visited 1 times, 1 visits today)