முதலில் வந்தது கோழியா? முட்டையா? வரலாற்று கேள்விக்கான விடை கண்டுபிடிப்பு
பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முதலில் வந்தது கோழியா? முட்டையா? கேள்விக்கான பதிலை தங்களது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர்.
நேச்சர் எக்காலஜி அண்ட் எவல்யூஷன் என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில், பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன வகையை சேர்ந்த விலங்குகளுக்கு முதுகெலும்பு முக்கியமானது.
அப்போது தான் இனப்பெருக்கம் செய்ய முடியும். விலங்குகள் வகையை சேர்ந்த ‘அம்னியோட்’-யின் பரிணாம வளர்ச்சியை பார்த்தால், அவை முட்டைகளை ஈனும் தகுதி படைத்தவையாக இருக்கலாம்.
நீரில் வாழும் அம்னோடிக் வகை விலங்குகள், அவை முட்டையை ஈன்று பின்னர் நிலத்தில் வாழ்ந்திருக்கலாம்.
அதன் மூலம் பறவையினங்கள் தோன்றியிருக்கலாம்’ என்று கூறியுள்ளனர். இருந்தாலும் ஆய்வறிக்கையின் முடிவுகள் மழுப்பும் வகையில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
(Visited 7 times, 1 visits today)