ட்ரம்ப், மோடி உரையாடலில் எலன் மஸ்க் பங்கேற்றாரா?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump மற்றும் இந்திய பிரதமர் மோடி Modi ஆகியோருக்கிடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்கும் Elon Musk கலந்துகொண்டிந்தார் என வெளியான தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மேற்படி தகவலை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில்,
“ மார்ச் 24 அன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் இடையே மட்டுமே நடந்தது.
ஏற்கனவே கூறியதுபோல், அது மேற்காசியாவின் நிலைமை குறித்த கருத்துகளை பரிமாறிக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது’ என்று தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி , டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கிடையிலான தொலைபேசி உரையாடலில் கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க்கும் இணைந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இரு நாட்டு தலைவர்கள் இடையேயான தொலைபேசி உரையாடலில் அரசாங்க தொடர்பு இல்லாத ஒரு தனி நபர் இணைவது பேசுபொருளானது. இந்நிலையிலேயே மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.





