கௌதம் மேனன்- தர்ஷன் நடிப்பில் உருவாகும் புதிய “காட்ஸ்ஜில்லா”
நடிகர்கள் கௌதம் மேனன், மற்றும் பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.
பிக்பாஸ் மூலம் கவனம் பெற்றவர் இலங்கையரான நடிகர் தர்ஷன். அப்போட்டியில் பங்கேற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றவர் தொடர்ந்து கூகுள் குட்டப்பா, சரண்டர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது, காட்ஸ்ஜில்லா என்கிற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
மோகன் குருசெல்வா இயக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், ரோபோ ஷங்கர், கேபிஒய் வினோத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இது காதல், நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகவுள்ளது.






