D54 படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
தனுஷின் நடிப்பில் இறுதியாக இட்லி கடை திரைப்படம் வெளியானது. அடுத்து தனுஷ் போர் தொழில் படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் D54 படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மமிதா பைஜூ இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், D54 படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ” தனுஷின் பிளாக்பஸ்டர் படம், எழுத்து மற்றும் ஆடியோ தொடர்ந்து வருகிறது. எனது படைப்புகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குநர் மற்றும் சைலண்ட் கில்லர்” என்று தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)





