பொழுதுபோக்கு

மீண்டும் ஹாலிவுட் பக்கம் செல்லும் தனுஷ்… மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘கேப்டன் மில்லர்’ பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தனுஷ் ஹாலிவுட் படத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி பல படங்கள் வெளியாகிறது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’, நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’, அருண் விஜய் நடிப்பில் ‘மிஷின் சாப்டர் 1’ ஆகிய படங்கள் இன்று வெளியாகி இருக்கிறது. இதில் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, மூன்று பாகங்களாக வெளியாகும் படம் என்பதை இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் படத்திற்கான புரோமோஷனும் தீவிரமாக நடந்தது. இதில் இயக்குநர் அருண் மாதேஸ்வரனிடம், “ஹாலிவுட்டில் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் யாரை வைத்து இயக்குவீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த "கேப்டன் மில்லர்" படக்குழு- ஏன் தெரியுமா? |  Tamil cinema captain miller crew thanked cm

அவர் கூறியதாவது, “தனுஷே ஹாலிவுட் ஹீரோதானே? அதனால் அவரை வைத்துதான் படம் இயக்குவேன். அதுமட்டுமில்லாமல், தனுஷ் ஹாலிவுட்டில் ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்துள்ளார். அதனால், அவர் அங்கிருக்கும் பார்வையாளர்களுக்கும் பரிட்சயமானவர்தான். அதனால், சந்தேகமே இல்லாமல் என் சாய்ஸ் அவர்தான்” என்றார்.

‘தி கிரே மேன்’ படத்தை தொடர்ந்து, மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக அருண் மாதேஸ்வரன் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த விஷயம் தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ‘கேப்டன் மில்ல’ரை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘D 50’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?’ படங்களும், பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் மூவி, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படமும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!