இட்லி கடை முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?
தனுஷ, இயக்கி நடித்து வெளியாகி உள்ள தமிழ் திரைப்படம் ‘இட்லி கடை’, முதல் நாளில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் போன்றவர்கள் படத்தில் நடித்துள்ளனர்.
இட்லி கடை படத்துக்கு நல்ல விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய ஓபனிங்கை கொடுத்தது.
இந்த ஆண்டு தனுஷ் நடித்த குபேரா படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் மிகவும் குறைவாக 4.5 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்த நிலையில் இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் இட்லி கடை படம் முதல் நாளில் ரூ.10.40 கோடி வசூலித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 9.75 கோடியாக உள்ளது. தெலுங்கு வெர்சன் 65 லட்சம் வசூலை பெற்றுள்ளது.





