தனுஷ் – மிருணாள் தாகூர் காதல்? பாலிவுட்டில் பெரும் பரபரப்பு? வைரலாகும் படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்த நடிகர் தனுஷ் அவரை பிரிந்து வாழ்கின்றார்.
நடிகர் தனுஷ் நடிகராகவும் இயக்குநராகவும் தொடர்ந்து பிசியாக இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் படு பிசியாக நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான குபேரா திரைப்படம் அவருக்கு தெலுங்கில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்தது. ஆனால், தமிழில் பெரிதாக ஓடவில்லை.
அடுத்ததாக இட்லி கடை படம் அக்டோபர் மாதம் வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில், ஏகப்பட்ட நடிகைகளுடன் தனுஷ் பார்ட்டி ஒன்றில் தென்பட்ட போது நடிகை மிருணாள் தாகூர் உடனிருந்தார்.
இந்நிலையில், தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் டேட்டிங் செல்வதாக ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனுஷ் உடன் இதுவரை ஒரு படத்தில் கூட மிருணாள் தாகூர் இணைந்து நடிக்காத நிலையில், தற்போது தொடர்ந்து தனுஷ் உடன் மும்பையில் அடிக்கடி மிருணாள் தாகூர் சந்திப்பு நடத்தி வருகிறார் என்றும் இருவரும் ஒன்றாக சுற்றி வருகின்றனர் என பாலிவுட் மீடியாக்கள் போட்டோக்களுடன் கிசுகிசுக்களை எழுத ஆரம்பித்துள்ளன.
மிருணாள் தாகூரின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், அந்த பார்ட்டியில் கலந்துக் கொண்ட தனுஷ் கடந்த வாரம் வெளியான மிருணாள் தாகூரின் சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் ப்ரீமியர் காட்சியிலும் பங்கேற்றுள்ளாராம்.
மேலும், இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் போட்டிருக்கிறார் மிருணாள் தாகூர்.
தனுஷ் – க்ரித்தி சனோன் உடன் இணைந்து தேரே இஷ்க் மெயின் படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக அப்துல் கலாம் பயோபிக்கில் நடிக்க உள்ள நிலையில் அந்த படத்தில் மிருணாள் தாகூர் முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்புகள் இருக்குமா? என்றும் அதற்காகவே இருவரும் நெருங்கி பழகி வருகிறார்களா? என ஏகப்பட்ட ஊகங்கள் கிளம்பியுள்ளன.
இதுதொடர்பாக தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இதுவரை எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை.