நியூஸிலாந்து விடுதியில் வேண்டுமென்றே தீ வைப்பு? பொலிஸார் தகவல்

நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் விடுதியொன்று தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக இருக்கலாம் என தாம் கருதுவதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 மாடிகள் கொண்ட இக்கட்டடம் நேற்று அதிகாலை தீப்பற்றியதால், குறைந்தபட்சம 6 பேர் பலியானதுடன், இச்சம்பவத்தின் பின் 20 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் சேதங்கள் ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.
இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தீ வைப்பு சம்பவமாக நாம் கருதுகிறோம் என பொலிஸ் பரிசோதகர் டியொன் பென்னட், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தாம் பேச வேண்டிய நபர்களின் பட்டியலொன்று உள்ளதாகவும், ஆனால், எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)