மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கொழும்புக்கு டெல்லி அழுத்தம்!
மாகாணசபைத் தேர்தலை நடத்தியாகவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இது தொடர்பில் தேசிய மக்கள் சக்திக்கு இந்தியா அறிவுறுத்தல் விடுக்கக்கூடும் என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ மாகாணசபைத் தேர்தலுக்காகவே நாம் காத்திருக்கின்றோம். அதனை நிச்சயம் நடத்தியாக வேண்டும்.
ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ளார், எனவே, தேர்தலை நடத்துமாறு உரிய அறிவுறுத்தல் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும்.ஜனாதிபதியும் இந்தியா செல்லவுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் உண்மை என்னவென்பது தெரியவரும்.
எதிர்காலத்தில் வலுவானதொரு எதிரணி கட்டியெழுப்படும். இதனை எவராலும் தடுக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியுடனான கூட்டணிக்கே நாம் முன்னுரிமை வழங்குவோம்.” – எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.





