சீனாவில் நலிவுறும் பிறப்பு விகிதம் – திண்டாடும் அரசு!
சீனாவின் பிறப்பு விகிதங்களை அதிகரிக்க அரசாங்கம் பல்வேறு சலுகைகளை வழங்கிய போதிலும், கடந்த 2025 ஆம் ஆண்டில் நான்காவது ஆண்டாக மக்கள் தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டின் மக்கள் தொகை 3.39 மில்லியன் குறைந்து 1.4 பில்லியனை எட்டியதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
இது முந்தைய ஆண்டை விட விரைவான சரிவைக் குறிக்கிறது என்று அரசாங்கம் இன்று வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1,000 பேருக்கு 8.04 ஆக உயர்ந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
வயதான மக்கள் தொகை மற்றும் மந்தமான பொருளாதாரத்தை எதிர்கொண்டுள்ள பெய்ஜிங் அதிகமான இளைஞர்களை திருமணம் செய்து கொள்ளவும் குழந்தைகளைப் பெறவும் ஊக்குவிக்கின்றது.
இதற்கமைய மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் 3,600 யுவான் (£375; $500) வழங்கியது. சில மாகாணங்களில் கூடுதல் கொடுப்பனவுகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பு உட்பட தங்கள் சொந்த குழந்தை போனஸையும் வழங்குகின்றன.
முன்னதாக சீனாவில் அதிகரித்த மக்கள் தொகை காரணமாக பெற்றோர் ஒரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





