ஈரானில் இறப்பு எண்ணிக்கை 3,100 ஐ கடந்தது – மோதலால் அப்பாவி பொதுமக்கள் பலியான சோகம்
ஈரானில். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அன்று தொடங்கிய மோதல்களின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,186 ஐ எட்டியதாக மனித உரிமைகள் ஆர்வலர் நிறுவனமான HRANA செய்தி வெளியிட்டுள்ளது.
மனித உரிமை அமைப்பின் தகவலின்படி, இறந்தவர்களில் சுமார் 210 குழந்தைகள் உட்பட 1,394 பேர் பொதுமக்கள் என தெரிவித்துள்ளது..
இதேவேளை, 1,153 பேர் ஈரானிய இராணுவத்தினரென கூறப்பட்டுள்ளது,
மேலும் 639 இறப்புகளின் காரணம் இன்னும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை.
இந்த நிலவரம், ஈரானில் நிலவும் மோதலின் மனிதப் பாதிப்பை வெளிப்படுத்துகிறது மற்றும் பதற்றமான சூழலை மீண்டும் நினைவூட்டுகிறதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





