இலங்கை செய்தி

முல்லைத்தீவில் 300 போதை மாத்திரைகளுடன் வியாபாரி கைது

புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரம் செய்து வந்த முக்கிய சந்தேக நபர் 300 போதை மாத்திரைகளுடன் புதுக்குடியிருப்பு பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும்
ஆடைதொழிற்சாலை ஊழியர்களை இலக்கு வைத்து குறித்த சந்தேக நபர் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் 300 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை பொலிசார் கைது செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும் பொலிசாரின் பிடியிலிருந்து தப்பி செல்ல முற்பட்டு பொலிசார் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு நேசன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு போதை மாத்திரையின் விலை 250 ரூபாய் விற்கு நகர் பகுதியில் இவர் விற்பனை செய்து வந்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் புதுகுடியிருப்பு பகுதியில் பல்வேறுபட்ட இடங்களில் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரையும் போதை மாத்திரைகளையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முறபடுத்தவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர்.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை