பொழுதுபோக்கு

சிங்கம் களம் இறங்கியாச்சி…. வனிதா மகளானா சும்மாவா???

பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ஆம் திகதி கோலாகலமாக தொடங்கியது. வழக்கமாக ஒரு வீட்டில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி இந்த முறை 2 வீடுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இதற்கு முந்தைய சீசன்கள் எல்லாம் முதல் வாரம் ஜாலியாக செல்லும், போகப்போக தான் போட்டியாளர்களிடையே சண்டை வெடிக்கும். ஆனால் இந்த முறை முதல் வாரத்திலேயே ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால், அனல்பறக்க சென்றுகொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 7.

பிக்பாஸ் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய போட்டியாளர்கள் பட்டியலில் வனிதாவுக்கு எப்பவுமே தனி இடம் உண்டு. பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்றபோது அவர் செய்த அலப்பறைகள் ஏராளம்.

https://twitter.com/vijaytelevision/status/1710225888745574492?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1710225888745574492%7Ctwgr%5E04b720595511f3bb8213f9dac93076c51d4ca5b4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fstatic.asianetnews.com%2Ftwitter-iframe%2Fshow.html%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2Fvijaytelevision%2Fstatus%2F1710225888745574492%3Fref_src%3Dtwsrc5Etfw

தற்போது பிக்பாஸ் 7-வது சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். சைலண்டாகவே இருந்து வந்த ஜோவிகா, சில தினங்களுக்கு முன் நடந்த டாஸ்க்கில் தனக்கு படிப்பு சரியாக வராததால் தான் 9-ம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டதாக கூறி கண்கலங்கினார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற டாஸ்கின் போது ஜோவிகாவிடம் பள்ளியில் படிக்கும் அடிப்படையான கல்வி என்பது முக்கியமானது என பேசினார் விசித்ரா.

இதனால் கடுப்பான ஜோவிகா, எல்லாரும் படிச்சு பெரிய ஆள் ஆகணும்னு இல்லனு கொதித்தெழுந்தார். அப்போது குறுக்கிய முயன்ற விசித்ராவிடம், படிப்புங்குற விஷயத்துல நிறைய குழந்தைகள் தப்பான இதுல போகுது அவர்கள் சார்பாக தான் நான் இங்கு வந்திருக்கிறேன் என ஜோவிகா சொல்ல, நீ என்ன வேண்டுமானாலும் பேசுறது கருத்து சுதந்திரம் இல்ல என விசித்ரா குறுக்கிட்டு பேசியதைக் கேட்டு டென்ஷன் ஆன ஜோவிகா, நான் தப்பா எதாவது சொன்னனா, நான் பேசிட்டு இருக்கேன் சைலண்டா இருங்கனு விசித்ராவை பார்த்து ஒரு சவுண்டு விட்டதை கேட்டு பிக்பாஸ் வீடே ஆடிப்போனது.

ஜோவிகாவின் பேச்சில் நியாயம் இருந்ததால் நிக்சன், ரவீனா, பவா செல்லதுரை ஆகியோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அதேபோல் விசித்ரா தன்னை நீ கண்டிப்பா 12ம் வகுப்பு முடிக்க வேண்டும் என கூறியதை சுட்டிக்காட்டியதோடு, இதற்கு குறும்படம் கூட போட சொல்லுமாறு கூறினார். இறுதியா என்னைப்பற்றி எதுவேண்டுமானாலும் பேசு என் பேமிலியை பற்றி பேசாதே என விசித்ராவிடம் காட்டமாக கூறியுள்ளார் ஜோவிகா.

இதுகுறித்த புரோமோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் வனிதா பொண்ணுனா சும்மாவா என பயர் விட்டு வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்