இலங்கையில் பரவும் ஆபத்தான நோய் : வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!
சிக்குன்குனியா அறிகுறிகளுடன் பல குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா கூறுகிறார்.
காய்ச்சல், மூட்டு வலி, உடல் வலி மற்றும் மூக்கைச் சுற்றி கருமையாக மாறுதல் ஆகியவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று நிபுணர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்தால், விரைவில் மருத்துவமனைக்குச் சென்று தேவையான சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெங்குவைப் பரப்பும் அதே கொசுதான் சிக்குன்குனியாவையும் பரப்புகிறது என்றும், எனவே கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிப்பது மிகவும் முக்கியம் என்றும் சிறப்பு மருத்துவர் குறிப்பிட்டார்.
(Visited 7 times, 7 visits today)